Pope Tamil Mandrum

போப் தமிழ் மன்றம்

முன்னாள் முதல்வர் மேஜர் டி.ஜெ.டி. இராஜ்குமார் அவர்கள் 1993, பெப்ரவரி, முதல் நாள் போப் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார்கள். அன்று முதல் தமிழ் சம்பந்தமான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டிகளுக்கு மாணவர்களை வெளியிடங்களுக்கு அனுப்பும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.
ஆரம்பக் காலத்தில் கல்லூரி அளவில் போட்டிகளுக்கான சுற்றறிக்கை அனுப்பினால் ஒரு மாணவன் கூட வந்து தன் பெயரைப் பதிவு செய்வதில்லை. பின்னர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மிகக் குறுகிய காலத்தில் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பங்கு பெற்று, பரிசுகள் பெற்று வந்தார்கள்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவற்றுள் ஒரு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். 1995-இல் தூத்துக்குடி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.பொன்சுப்பையா அவர்கள் தூத்துக்குடியில் வைத்து கல்லூரி மாணவர்களுக்கென நடத்திய கட்டுரைப் போட்டியில் இல. உமாபதி (ஐஐ டீ.ளுஉஇ இயற்பியல்) முதல் பரிசான ரூபாய் ஆயிரத்தையும், தனிநடிப்புப் போட்டியில் இரா. கணேசன் சத்தியராஜ் (ஐ டீ.ளுஉஇ விலங்கியல்) இரண்டாம் பரிசான ரூபாய் ஐநூறையும் திரைப்பட இயக்குநர் நடிகர் விசு அவர்களிடமிருந்து பெற்று வந்தார்கள். அதுபோல 1996-98-ஆம் ஆண்டு முதுஅறிவியல் இயற்பியல் துறை மாணவி ஹேமாமாலினி இயற்பியல் பாடத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தையும், பேச்சுப் போட்டியில் மட்டும் நாலு கிராம் தங்க டாலர், ரூபாய் 10000 மற்றும் பல ஆயிரம் ரூபாய் பரிசுகள் எனச் சுமார் ரூபாய் 25000 வரை பரிசுகள் பெற்று வந்தார். இன்றும் தமிழக அளவில் பெரிய பேச்சாளராக உலா வருகிறார்.
இவ்வாறு பரிசுகள் பெற்று வரும் மாணவர்களின் வெற்றிகளைக் கண்டு அகமகிழ்ந்ததோடு அவர்களை மிகவும் பாராட்டி உற்சாகப்படுத்துவார்கள். அதுமட்டுமில்லாமல் முதன்முதலாகக் கல்லூரி அளவில் சுற்றறிக்கை அனுப்பி, பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டுவார்கள். அவர்கள் முன்பு 1969 முதல் 1974 வரை போப் கல்லூரி ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய போது தமிழ்த்துறைத் தலைவர் பேரா. ஞா. இராச மாணிக்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்று வந்த போப் தமிழ்மன்றச் செயல்பாடுகளையும், பயன்பாடுகளையும் அடிக்கடி நினைவு கூர்வார்கள். இதனால் பின்னர் முறைப்படி 13.08.2002-ஆம் ஆண்டு முதல்வர் மேஜர் டி.ஜெ.டி. இராஜ்குமார் அவர்கள் தலைமையில், போப் தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவர் பேரா.ஞா. இராச மாணிக்கம் அவர்களால் போப் தமிழ் மன்றம் தொடங்கப்பட்டது. அச்சமயம் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆ.விசுவாசம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.
முதல்வர் இராஜ்குமார் அவர்கள் பணிநிறைவு செய்யும் வரை ஒவ்வொரு ஆண்டும் மன்றத் தொடக்கவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது கல்லூரி அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் அது போப் தமிழ் மன்ற நிகழ்ச்;சிகள் மட்டுமே. அப்போது சிறப்புப் பட்டி மன்றங்கள், அல்லது சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளுக்கு வெளியிடங்களிலிருந்து சிறப்புப் பேச்சாளர் அழைக்கப்படுவர். ஆண்டின் இடையில் பல மன்றக் கூட்டங்கள் நடைபெறும். அவ்வேளை மாணவர்களின் தனித்திறன் காணும் போட்டிகளும் நடத்தப்படும். ஆண்டின் இறுதியில் போப் தமிழ் மன்ற நிறைவு விழா நடைபெறும். இதில் போட்டிகளில் பரிசு பெற்றவர்கள், தமிழ்ப்பாடத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள், பல்கலைக்கழக ரேங்க் பெற்றவர் ஆகியோர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். இறுதியில் முதல்வர், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், போப் தமிழ்மன்ற மாணவர்கள், நிறைவு விழா சிறப்பு விருந்தினர் இவர்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கப்படும். ஓவ்வொரு ஆண்டும் போப் தமிழ் மன்ற நிகழ்வுகளின் அறிக்கையும், புகைப்படமும் கல்லூரி ஆண்டிதழில் வெளியிடப்படும்.
தொடக்கத்தில் முதல்வர் இராஜ்குமார் அவர்கள் Pயவசழn ஆகவும் நான் செயலாளராகவும் பணியாற்றினோம். பின்னர் 2004 முதல் 2008 வரை பொருளியல் துறைப் பேராசிரியர் திருமதி. ஜெர்ரி ஜோஸ்பின் அவர்கள் போப் தமிழ் மன்றத்தோடு இணைந்து செயலாற்றினார்கள். அதன் பின்னர் 2011 முதல் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். அ. வெலிங்டன், முனைவர். தே. ரேச்சல், முனைவர். ஜெ.ரா. ஹேனா லில்லி ஆகியோர் போப் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
போப் தமிழ் மன்றத்தின் முந்நாள், இந்நாள் மாணவர்கள் பலரும் அதன் பயன்பாட்டை அனுபவித்து உணர்ந்து நன்றியுணர்வுடன் கூறி வருகின்றனர்.
வாழ்க போப் தமிழ் மன்றம்! வளர்க அதன் செயல்பாடுகள்!!