Staff members are requested to fill the staff profile
Department of Tamil
தமிழ்த்துறை
தமிழின் விளைநிலமாம் சாயர்புரத்தில் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசான்கள் மிகப் பெரிய ஜாம்பவான்கள். அவர்களுள் முக்கியமானவர் இருவர். ஒருவர் புகழ்பெற்றச் சாயர்புரம் செமினெரியை 1844-இல் ஆரம்பித்து, தமிழ் சொல்லிக் கொடுத்தத் தமிழறிஞர், தமிழ்த்தொண்டர் டாக்டர். ஜி.யு.போப். மற்றொருவர், ஹக்ஸ்டபிள் ஐயர் செமினெரியின் முதல்வராக இருந்த வேளையில், பேராயர் கால்டுவெல்லால் 1852-இல், தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழாசிரியர் கிறிஸ்தவக் கம்பர் ஹச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை.
இச்செமினெரியின் வழித்தோன்றலாக 1962, ஜுன், 25-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட போப் கல்லூரியில் தொடக்கக் காலத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களாக (Pioneer staff) இருவர் பணியில் சேர்ந்தனர். ஒருவர் தமிழ்த்துறைத் தலைவர் ஞா. இராசமாணிக்கம் M.A.,M.Phil., மற்றொருவர் தமிழ்த்துறைப் பேராசிரியர் த. மனோகரசிங், M.A., B.O.L.,
திரு. ஞா. இராசமாணிக்கம் மிகச் சிறந்த பேச்சாளர், நகைச்சுவையாளர், பட்டிமன்ற நடுவர். தமிழ் இலக்கிய வரலாறு, கொற்கை என்ற நூற்களின் ஆசிரியர். இவர்கள் 31.05.2024 அன்று பணிநிறைவு பெற்றார்கள்.
திரு. த. மனோகரசிங் நல்ல எழுத்தாளர், இலக்கியவாதி. சிந்தனைக்கினிய செல்வியர், காமராசர், அன்னை இந்திரா, பிரதமர் இராஜீவ் காந்தி, முதல்வர் முல்லர், தீந்தமிழ்க் கட்டுரைகள் (42-ஆம் பதிப்பு வெளிவந்துள்ளது) ஆகிய நூற்களின் ஆசிரியர். இவர்கள் 31.05.2024 அன்று பணிநிறைவு பெற்றார்கள்.
தமிழ்ப் பேராசிரியர் ஆ. விசுவாசம் எம்.ஏ., இவர்கள் 01.07.2024 அன்று பணியில் சேர்ந்து 31.05.2024 அன்று பணிநிறைவு பெற்றார்கள். இவர்கள் ஒரு சமூகசேவகர், தமிழ் இலக்கிய வரலாறு, பட்டப்படிப்புகளுக்கான தமிழ் உரை நூல் வெளியிட்டவர்கள். பணி நிறைவுக்குப் பின் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் இலக்கிய பேரவைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்கள்.
சாயர்புரத்தில் 1880-இல் ஒரு கல்லூரி உண்டானது. ஆனால் மூன்றே ஆண்டுகளில் 1833-இல் இக்கல்லூரி தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டது. அதுபோல நூறு ஆண்டுகளுக்குப் பின் 1980-இல் போப் கல்லூரியில் பி.ஏ (தமிழ்) பிறந்தது. ஆனால் அது மூன்றே ஆண்டுகளில் ஒரே ஒரு குரூப் மாணவர்கள் வெளிவந்த 1983-இல் மரித்துப் போனது. நல்ல வாய்ப்பு கைநழுவிப் போனது. அது இன்று வரை அகப்படவில்லை. எனினும் இன்றைய முதல்வர் டாக்டர் அ.செல்வக்குமார் அவர்கள் மீண்டும் பி.ஏ(தமிழ்) கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.
1989-இல் பேரா.விசுவாசம் அவர்களும், 1992-இல் பேரா.மனோகரசிங் அவர்களும் பணி நிறைவு பெற்றாலும் அரசு எந்த ஆசிரியரையும் நிரந்தரமாக நியமிக்கவில்லை. இதனால் திருமதி. செ. குணசீலி M.A.,M.Phil.,B.Ed., திரு.அ.வெலிங்டன் பிரான்சிஸ் பிரபாகர் M.A.,M.Phil.,B.Ed.,Ph.D ஆகிய இருவரும் 01.06.2024 முதல் தொகுப்பூதிய ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். பின்னர் 05.01.2024 முதல் அரசு நிதி உதவி பெறும் நிரந்தர ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டார்கள்.
தமிழ்த்துறைத் தலைவர் செ. குணசீலி ஒரு நல்லாசிரியர், சில ஆண்டுகள் N.S.S பொறுப்பேற்று நடத்தினார்கள். இவர்கள் காலத்தில் பகுதி-ஐ தமிழில் பல மாணவர்கள் பல்கலைக்கழக ரேங்க் பெற்றார்கள். இவர்கள் 31.05.2010-இல் பணிநிறைவு பெற்றார்கள். தற்பொழுது மீண்டும் சுயநிதி-பாடப் பிரிவில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்கள்.
தமிழ்த்துறைத்தலைவர் முனைவர். அ. வெலிங்டன் பிரான்சிஸ் பிரபாகர் நல்ல பேச்சாளர், போப் தமிழ் மன்ற பொறுப்பாளர், கல்லூரி பொன் விழா மலரின் ஒருங்கிணைப்பாளர், கல்லூரி பொன் விழா ஆண்டின் வெளியீடான 'சாயர்புரத்தந்தை அருட்திரு. ஜி.யு. போப் - வாழ்க்கை வரலாறு' என்ற நூலின் ஆசிரியர்களுள் ஒருவர். டாக்டர். ஜி.யு. போப்பின் தமிழ் இலக்கணநூலை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
முனைவர். ஒய். ஏசு, M.A;M.Phil;Ph.D., தமிழ்ப்பேராசிரியராக 1993 முதல் 2000 வரை தொகுப்பூதிய ஆசிரியராகப் பணியாற்றினார்.
முனைவர் தே. ரேச்சல் அன்னாள் கிறிஸ்டிபாய் M.A;M.Phil;M.Ed;Ph.D., தமிழ்த்துறைப் பேராசிரியராக 30.03.2024 அன்று பணியில் சேர்ந்தார்;. இவர் சிறந்த ஆய்வாளர், எழுத்தாளர், போப் தமிழ் மன்ற பொறுப்பாளர், 23.07.2024 முதல் N.S.S. பொறுப்பேற்று உள்ளார். 'ச.தமிழ்ச் செல்வன் படைப்புகளின் நோக்கும் போக்கும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
முனைவர் ஜே.ரா. ஹேனாலில்லி M.A., Ph.D., தமிழ்ப் பேராசிரியராக 15.07.2024 முதல் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் சிறந்த பேச்சாளர், கவிஞர், போப் தமிழ் மன்ற பொறுப்பாளர், நல்ல பாடகர், UGC – NET தேர்வில் வெற்றி பெற்றவர். 'சுந்தரராமசாமி சிறுகதைகளில் மனித உறவுகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
போப் கல்லூரியில் சுயநிதி – பாடப்பிரிவு (Information Technology) 2001-இல் ஆரம்பிக்கப்பட்டது. அதுமுதல் தமிழாசிரியராக திரு. அருள்தாஸ் M.A.,M.Phil., நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் முனைவர். ஜேஸ்லின் ரொசைட்டா M.A.,M.Phil.,Ph.D., 01.03.2024 முதல் 30.06.2024 வரை பணியாற்றினார். 'தாமரைச் செந்தூர் பாண்டி சிறுகதைகளில் வட்டார வாழ்வியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தற்பொழுது திருமதி அ.வசந்தி M.A;M.Phil;B.Ed., 06.07.2024 முதல் பணியாற்றுகிறார். இவர் நல்ல கவிஞர். 'பிரபஞ்சன் சிறுகதைகளில் ஆளுமை' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார்.